Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் கட்சி தலைவராக பிரியங்கா” காங்கிரஸ் முதல்வர் வேண்டுகோள் …!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பலரை பொறுப்பாக வேண்டுமென்று தெரிவித்தார்.

Image result for அம்ரீந்தர் சிங் பிரியங்கா காந்தி ராகுல் காந்தி

மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் பதவி விலகினர்.ஆனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டுமென்று பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Image result for முதல்வர் அம்ரீந்தர் சிங் பிரியங்கா

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் , பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர் , பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கான சரியான தேர்வு என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது  செயற்குழுவை சார்ந்தது என்றும் , செயற்குழுவால் மட்டுமே அதிகாரம் எடுக்க முடியும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |