மைசூருவில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் நண்பர் கூறிய வாக்கு மூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் மைசூர் வெளிவட்ட சாலை சந்திப்பு அருகே கடந்த திங்கட்கிழமை அன்று வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். காவல்துறையினர் தடுத்த முற்பட்டபோது காவலரின் லத்தி பைக்கின் ஹேண்டில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர் . இதில் தேவராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்து கோபமுற்ற அங்கிருந்த மக்கள் காவலரை பயங்கரமாக தாக்கினர். இதில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் காவல், வாகன ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தேவராஜன் பின்னால் பைக்கில் அமர்ந்து வந்த இளைஞரின் வாக்குமூலம் இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் காவலர்கள் எங்களை நிறுத்தவில்லை. தேவராஜன் பைக்கின் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வந்த லாரி எங்களை இடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதனால் நாங்கள் கீழே விழுந்தோம் என்று தெரிவித்தார். இதற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.