Categories
உலக செய்திகள்

பரவி வரும் கொரோனா…. இவர்களிடையே குறைந்து வருகின்றது…. புள்ளி விவரத்தை வெளியிட்ட சுகாதார துறை…!!

பிரிட்டனில் கொரோனா பரவலில் வயதானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் முதலில் வயதானவர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் தற்போது இளம் வயதினர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிரிட்டனில் 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட நபர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவகின்றனர் என்று அந்நாட்டின் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் பிரிட்டனில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் 70 முதல் 85 வயதுக்கு உட்பட்டவர்கள் மருத்துவமனையில் கொரோனாவின் சாதாரண சிகிச்சை பிரிவில் கடந்த வாரம் 1,00,000 பேரில் 4.68% நபர்கள் பதிப்படைந்துள்ளதாகவும், அவை தற்போது 3.49% குறைந்துள்ளதாகவும், மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த வாரத்தில் 0.37% பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவே தற்போது 0.26% குறைந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டனில் இதுவரை கொரோனவால் 4,360,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1,26,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Categories

Tech |