உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு காத்திருந்த மணமகனுக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒரு நபர் 25 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புரோக்கர் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்யப் பட்டது. அந்த பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை எனவும் ,அண்ணன் அண்ணி மட்டுமே இவர்களை வளர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் குறைந்த வரதட்சனை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டு சார்பில் அந்த பெண்ணிற்கு பரம்பரை நகைகள் அணிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலிரவுக்காக மணமகன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மணமகள் பாலை அவருக்கு குடுத்து விட்டு கட்டையால் அவரை அடித்துள்ளார். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் இரண்டு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து கண்விழித்த மணமகன் நடந்ததை காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த புரோக்கர் மற்றும் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.