38 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினியுடன் இணைந்து நடிக்காத நடிகை யார் என்று தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ரஜினியுடன் இணைந்து நடிக்காத பிரபல நடிகையின் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 38 வருடங்களாக தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தான் ஊர்வசி. இவர் ஹீரோயினாகவும், காமெடி கதாபாத்திரத்திலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒருபடம் கூட நடிக்காதது இன்றும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.