தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான வாக்குறுதியையும் மக்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு கட்சியினரும் அள்ளி வீசி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி தேர்தலுக்கான “உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முக்கியமாக தள்ளுபடி செய்யப்படும். கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.