Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்… போலீஸ் வலைவீச்சு..!!

சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை  ராயப்பேட்டையில்  தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.  அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள்  ஆகினார்கள் . 

Image result for murder

அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த  முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு  தலைமறைவாகினானன். பின்னர் ,  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி கொலை செய்த முல்லை நாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |