Categories
தேசிய செய்திகள்

மேகதாது பிரச்சனை குறித்த கேள்விக்கு… பதிலளிக்க மறுத்த வீரப்ப மொய்லி…!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக தலைவர்களும் திமுகவினரும் பேசி முடிவு எடுத்ததுதான் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தனர். இதுகுறித்து அகில இந்திய தலைமை இடம் தெரிவிக்கப்பட்டு அதில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டவை. இருவரும் இணைந்து வேலை பார்க்கிறார்கள். இதில் காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவு அதனையே செயல்படுத்தி வருகிறார்கள்.

தற்போது நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி மீது பழிவாங்கும் செயல். ஆளும் மத்திய பாஜக அரசு இது போன்ற செயல்களினால் எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என நினைக்கிறது. இதனால் மக்களிடையே அதிருப்தி தான் ஏற்படுமே தவிர ஆதரவு ஏற்படாது.

பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ஒரு அரசியல் பயணம் தான். மேற்கு வங்காளத்தில் ஏராளமான பங்களாதேஷ் மக்கள் உள்ளனர் அதற்காக இந்த பயணம் இருக்கலாம். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் உள்ளது. இது குறித்து மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி, இதர வரிகளுடன் மாநில அரசின் வரிகளும் இணைந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கடந்த ஆறு வருடங்களில் மத்திய அரசின் இந்த வரிவிதிப்பால் 23 லட்சம் கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தய மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி காங்கிரஸ் அரசு விலைவாசியினை கட்டுப்படுத்தி இருந்தது என்றார். இறுதியாக கர்நாடக அரசு மேகதாது அணை ஒதுக்கியுள்ள 75 கோடி ரூபாய் நிதி குறித்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்க விரும்பவில்லை எனக்கூறி புறப்பட்டுச் சென்றார்.

Categories

Tech |