தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் எங்கும் இயல்பாக சென்று வர முடியாது என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1700 தாண்டியது. இதையடுத்து இந்த நிலை தொடர்ந்து வந்தால் மக்கள் எங்கும் இயல்பாக சென்று வர முடியாது என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதனால் சுய கட்டுப்பாடுடன் செல்வதை உறுதி செய்வோம். கூட்ட நெரிசலை தவிர்ப்போம். முகக் கவசம் அணிவோம் என்று அந்தப் பதிவில் கூறியிருந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.