தேர்தலை முன்னிட்டு நாகையில் ஆயுதப்படையினர், துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நாகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகள் வழியாக சென்றது. இந்த கொடி அணிவகுப்பில் ஆயுதப்படையினர், துணை ராணுவ படையினர் உட்பட 100 பேர் பங்கேற்றனர்.