ஜெர்மனியில் தேசத்துரோக வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல சமையல் கலைஞர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்றால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சித்து பொதுமக்களிடையே வெறுப்புகளை தூண்டுதல், மக்களை திசை திருப்புவது போன்ற குற்றசாட்டுகள் அட்டிலா ஹில்டமன் என்பவர் மீது வைக்கப்பட்டது. மேலும் அவர் மீது தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன . கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜெர்மன் நிர்வாகம் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது .
மேலும் அவர் ஜெர்மன் மற்றும் துர்க்கி குடியுரிமை கொண்டவர் என்றும் விரைவில் அவர் ஜெர்மன் அடையாள அட்டையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .இவர் அரசியல்வாதிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் ஆட்சிப் பொறுப்புக்கு ஹிட்லர் தான் சரியான தெரிவு என்றெல்லாம் விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று என்பதே ஒரு பொய் நாட்டை சீரழித்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல் என்றெல்லாம் இவர் விமர்சித்துள்ளார்.