மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூச்சலிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டல்புதூரை சேர்ந்த லோகராஜ் என்ற வாலிபர் டி.என்.டி சான்றிதழில் இருக்கும் குளறுபடிகளை இன்றளவும் சரி செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் முதலமைச்சருக்கு எதிராக கண்டன வாசகங்கள் பொருந்திய பேனரை காண்பித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் லோகராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.