புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் பாஜக எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரியில் எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்து வந்துள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி எதுவும் பெறவில்லை. உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்றம் வேண்டுமென்றால் விசாரணையை கண்காணிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது?பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செல்போன் எண்கள் பாஜகவினருக்கு கிடைத்தது பற்றி ஆதார் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் தேர்தலை ஒத்தி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.