கனடாவில் வீட்டின் முன் விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி உயிரை எடுத்த ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனடாவில் அல்பேர்ட்டாவிலுள்ள மெடிசின் ஹாட் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அவரையும் அவரின் மனைவியும் ஏதோ ஒரு கும்பல் கண்காணித்து வருவதாகவும் தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் எழுதியிருந்தது .அப்படி பணம் தரவில்லை என்றால் அவரின் உறவினர்களை கொல்வதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது .மேலும் நாங்கள் நினைத்தால் விரலையோ, காதையோ நாக்கையோ வெட்டி அலுவலகத்திற்கு முன்னால் தொங்க விட முடியும் .
ஆனால் உடன் வேலை செய்பவர்களுக்கு இவ்வாறு செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் எழுதியுள்ளது. மேலும் அவரை ‘ரேடியோ கேள் ‘அதில் ஒருவர் கொல்லப்பட்ட செய்தி வெளிவரும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தது. அதேபோன்று 63 வயதான ஜேம்ஸ் அடுத்தநாள் பயங்கரமாக குத்தப்பட்டு வீட்டின் முன்னால் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதனைத் தொடர்ந்து கடிதம் அனுப்பப்பட்டவருடைய டிஎன்ஏ கிடைத்தது .
போலிஸார் சோதனையில் ஈடுபட்டதில் ராபர்ட் ஹொபிமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .