Categories
உலக செய்திகள்

இனி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஃபைசர் நிறுவனம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக நடைபெறும் சோதனையின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரியான மருந்தின் அளவு கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்று பல நாடுகள் கருதுகிறது.

 

Categories

Tech |