Categories
சினிமா தமிழ் சினிமா

கிண்டல்களை பார்த்து சோர்வாகி விட்டது…. கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி…!!

தன்னைப் பற்றி கேலி செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்திருந்த சாந்தனுவை பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஒருவரை இப்படி கேலி, கிண்டல் செய்தால் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகி விட்டது.

ஆனால் என்மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க , நடக்காம போயிடுமா? ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும். அப்போது என் பதில் இதுவாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |