Categories
கல்வி பல்சுவை

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா ???? TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை …..

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்ததை அடுத்து TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது …..

பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்த நிலையில் புத்தகத்தை வடிவமைத்த குழுவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) அறிக்கை அனுப்பியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் பக்கம் என் 142-ல் தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன் 300 ஆண்டுகள் பழமையானது என்றும் சமஸ்கிருதம் 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Image result for TAMIL VS SANSKRIT

இது தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிட்டு உள்ளதாக தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தை வடிவமைத்ததில் 13 பேர் கொண்ட குழுவிற்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

Categories

Tech |