Categories
சினிமா தமிழ் சினிமா

பல கோடி கடன்…. சொந்த வீட்டை விற்கும் அவலநிலை…. பிரபல காமெடி நடிகர் சோகம்…!!

பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அவரது சொந்த வீட்டை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் பலரின் மனதில் இடம் பிடித்தவர் தான் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்படி சந்தோஷமாக சென்ற அவரது வாழ்க்கை ஒரு பெரிய சிக்கலில் சிக்கியது. அது என்னவென்றால் அவர் எடுத்த வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால் ஏற்பட்ட பல கோடி கடனை அடைக்க அவரது சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். எனவே சோகத்தில் இருக்கும் கஞ்சா கருப்பு இனி நான் படம் தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Categories

Tech |