’99 சாங்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ’99 சாங்ஸ்’ . தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென கீழே இறங்கி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்.
https://twitter.com/salmanzahir_/status/1375161716158435332
அப்போது அவர் மேடையில் நின்று கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இந்த படத்தின் ஹீரோவிடம் சில வார்த்தைகள் ஹிந்தியில் பேசியுள்ளார். இதையடுத்து ‘ஹிந்தி’ என கூறி சிரித்துக் கொண்டே ஆர் ரஹ்மான் சட்டென மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர் அவர் அந்த தொகுப்பாளினியிடம் ‘நான் உங்களிடம் முதலிலேயே கேட்டேன். நீங்கள் தமிழில் தான் பேசவேண்டும்’ என்று கூறுகிறார். அப்போது பேசிய தொகுப்பாளினி ‘சாரி சார் சும்மா வெல்கம் செய்வதற்கு தான் இந்தியில் பேசினேன்’ என்கிறார். இதற்கு சிரித்துக்கொண்டே சரி பரவாயில்லை என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .