ஜெர்மனிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மார்ச் 28ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜெர்மன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 28ம் தேதி முதல் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது மற்ற நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வரும் பயணிகள் தனக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை செய்த சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும், மேலும் இந்த கொரோனா பரிசோதனைகளை அவர்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும், இந்த பரிசோதனையின் முடிவில் தங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அவர்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி விமான பணியாளர்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் பிசிஆர் போன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் ஜெர்மன் அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் வரும் மார்ச் 28 முதல் மே மாதம் இறுதி வரை செயல்படும் என்று அந்நாட்டு அரசின் சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.