பிரிட்டனில் பெண் ஒருவர் தன் 16 வயதிலேயே கோடீஸ்வரியாகி தற்போது அனைத்தையும் இழந்து அரசாங்க உதவி தொகையில் வாழ்க்கை நடத்திவருகிறார்.
பிரிட்டனில் இருக்கும் Cumbriya என்ற பகுதியில் வாகனம் ஒன்று மிக வேகமாக செல்வதைக்கண்ட காவல்துறையினர் விரட்டி சென்று பெப்பர் ஸ்பிரே அடித்து ஓட்டுநரை பிடித்துள்ளனர். அதன் பின்பு ஓட்டுநர் குறித்த விபரம் அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது நாட்டிலேயே மிக சிறு வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையை லாட்டரியில் பெற்றுள்ள callie Rogers தான் அவர்.
தற்போது 33 வயதாகும் இவர் அரசாங்கத்தின் நிதியுதவியை பெற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது தன் 16 வயதில் callie, ஒரு பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளர்களை சோதனை செய்யும் பணியில் இருந்துள்ளார். அப்போது இவருக்கு 3.60 பவுண்டுகள் தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது தான் இவருக்கு லாட்டரியில் மிகப்பெரிய பரிசு தொகை கிடைத்துள்ளது.
அதன் பிறகு Nicky Lawson என்பவரை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயானார். இதனைத்தொடர்ந்து 1,80,000 பவுண்டுகள் மதிப்பிற்கு மாளிகை ஒன்றை வாங்கி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு பின்பு கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதன் பிறகு அவரின் குழந்தைகளும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். அந்த சமயத்திலும் தன்னம்பிக்கையை இழக்காமல் 17,000 பவுண்டுகளுக்கு மார்பை அழகுப்படுத்தும் சிகிச்சையை செய்துள்ளார். அதன்பின்பு பணத்திற்காக அவருடன் நண்பர்கள் என்று பழகி, இறுதியில் அனைத்தையும் இழந்து அரசாங்கத்தின் நிதியுதவியை பெற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, சிறிய வயதில் அதிக பணத்தை பெற்று தற்போது அனைத்தையும் இழந்துவிட்டேன். அந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கை அல்ல. அது என்னை இரண்டாக உடைத்து விட்டது. இப்போது என் மனம் திடம் ஆகிவிட்டது. என் கடந்த பாதைகள் தந்த உயர்வை மறக்க விரும்புகிறேன். ஒரு சாதாரண ஆளாக வாழ நினைக்கிறேன். ஆடம்பர வாழ்க்கை, நண்பர்கள், பார்ட்டி என்று அந்த கால வாழ்க்கை அனைத்தும் பறிபோய்விட்டது. தற்போதிருக்கும் இந்த வாழ்க்கை தான் மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.