அப்படியே பேட்ட படத்தைப்போல் இருக்கும் மாஸ்டர் படத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் இன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மாஸ்டர் திரைப் படத்தின் பல காட்சிகள் அப்படியே ரஜினியின் பேட்ட திரைப்படத்தைப் போலவே இருக்கிறது என்று கூறி, அதைச் சார்ந்த புகைப்படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் சிலர் இதனை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
Petta X Master : A thread
Cudos to the Creator🔥. pic.twitter.com/nPmRgxIYbH
— Master🍥 (@peru_vaikkala) March 24, 2021
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் அப்படியே பேட்டை படத்தில் இருப்பது போலவே தான் இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
— Master🍥 (@peru_vaikkala) March 24, 2021