Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த இரண்டு ஹீரோக்களா?… ‘விக்ரம் வேதா’ பட ஹிந்தி ரீமேக்… வெளியான செம மாஸ் தகவல்…!!!

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது . மேலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது . கடந்த சில வாரங்களாக இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது .

Hrithik Roshan and Saif Ali Khan to star in Vikram Vedha's Hindi remake-  Cinema express

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சயிப் அலிகான், நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில்  சைப் அலி கானும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர். வருகிற கோடை விடுமுறையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |