சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் .
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக்கோயல் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தினமும் டியூஷன் சென்று வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ம் தேதி டியூசன் சென்றுவிட்டு வந்த இவரது மகள் சாந்தி காலனி 5வது தெருவில் சென்ற போது இரண்டு திருநங்கைகள் மாணவியை மிரட்டி செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர் . விசாரணையின் இறுதியில் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் அய்யப்பாக்கத்தைச் சார்ந்த அம்மு, சஞ்சனா என்ற இரண்டு திருநங்கைகள் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் . பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் துறையினர் அம்மு மற்றும் சஞ்சனா ஆகிய 2 திருநங்கைகளை கைது செய்தனர்.