அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்பு தூவா போர் லாவோ என்ற நபரும் யாங் என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். சிறிது நாட்களுக்கு பிறகு லாவோவின் மோசமான நடவடிக்கைகள் தெரியவந்ததால் யாங் லாவோவை விட்டு பிரிந்து சென்றார். அதற்கு பிறகு யாங்கிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லாவோ கடந்த 8 மாதங்களாக யாங்கை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் யாங் காவல் துறையினரிடம் 14 முறை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் லாவோவை காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் விடுதலையான 19 நாட்களில் லாவோ தனது முன்னாள் காதலியான யாங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அதே துப்பாக்கியால் சுட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது லாவோ, யாங் ஆகிய இருவரும் தோட்டத்தில் துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.