‘சியான் 60’ படத்தில் ரஜினி, கமல் பட பிரபலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் . சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, டார்ஜிலிங், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சவுண்ட் என்ஜினியராக குணால் ராஜன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.