Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஐ.பி.ல் போட்டியில் …ஸ்ரேயாஸ்அய்யருக்கு பதில் …அஸ்வின் கேப்டனா …!!!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் , டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ,8 அணிகள் விளையாட உள்ளது. இந்த 8 அணிகளில்  ஒன்றான டெல்லி அணியின், கேப்டனாக ‘ஸ்ரேயாஸ்அய்யர்’  இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய ஸ்ரேயாஸ்  அய்யருக்கு  தோள்பட்டையில் பலத்த  காயம் ஏற்பட்டது.

இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ,என்று மருத்துவர்கள் கூறினர். இதன் காரணமாக ,அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாத நிலையில் உள்ளார். எனவே ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டத்தை தொடர முடியாததால் ,அவருக்கு பதிலாக டெல்லி அணிக்கு திறமை வாய்ந்த வீரர்களான ரகானே ,அஸ்வின் மற்றும் சுமித் ஆகிய மூன்று வீரர்களில் யாரேனும் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |