Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 70 கிலோ…. மூட்டை மூட்டையாக கடத்திய வாலிபர்கள்…. ரோந்து பணியில் தூக்கிய காவல்துறையினர்….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் பறக்கும் படையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில், 2 மூட்டைகளில் 70 கிலோ மதிப்புடைய கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |