மதுரையில் பூட்டிய வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் வங்கியில் பணிப்புரியும் ஊழியர்கள் வேலை முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்விடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதை கண்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த மர்ம நபர்கள் வங்கியில் கொள்ளையடிக்காமல் ஓடிவிட்டனர். அப்போது தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களை முட்புதரில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இதனால் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையும், பணமும் திருடு போகாமல் தப்பியவிட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மர்மநபர்கள் விட்டு சென்ற ஆயுதங்களை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.