நடிகை சதா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஜெயம்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திய சதா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து நடிகை சதா விக்ரம், மாதவன் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார் . இதன்பின் இவர் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்திருந்தார்.
மேலும் நீண்ட இடைவெளிக்குப்பின் இவர் நடிப்பில் டார்ச்லைட் என்ற படம் வெளியாகியிருந்தது . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சதாவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சதா ‘திருமணம் குறித்த எந்த எண்ணமும் எனக்கு இல்லை . என் வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு நபரை நான் இதுவரை சந்திக்கவில்லை . அப்படி ஒருவரை சந்தித்தால் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன்’ என கூறியுள்ளார்.