ஏப்ரல் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பிரச்சாரம் செய்கிறார். குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்துக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.
இதைதொடர்ந்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போன்று நேற்று முன்தினம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பிரியங்கா காந்தி 27ஆம் தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 3ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.