மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
இன்று உங்கள் புத்திசாலித்தனத்தால் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். இன்று உங்களுக்கு மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி நிலவும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து காரியங்களும் அனுபவமாக நடக்கும். மனக்கவலை அனைத்தும் நீங்கிவிடும். நிம்மதி உங்களுக்கு கிடைக்கும். இன்று நீங்கள் பதிவு தொழில் தொடங்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வரன் வந்துசேரும்.
கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல வரன் கைகூடும். இன்று உங்களுக்கு கனவு தொல்லை அதிகரித்து காணப்படும். எதைப் பற்றிய சிந்தனை ஒதுக்கி எப்பொழுதுமே தோன்றிக் கொண்டிருக்கும். கமிஷன்ஸ் மற்றும் ஏஜென்சி துறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் கிட்டும். கான்கிரீட் போன்ற துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது சிறந்தது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சில சலசலப்புகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கல்விக்காக நீங்கள் இன்று எதை செய்தாலும் கொஞ்சம் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி நீங்கள் பாடங்களை கற்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எல் கலந்த சாதத்தை அன்னம் வைத்து கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.