மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கபட்டு வருகிறது. அதன்படி சமீபகாலமாகவே பெட்ரோல்-டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக கொஞ்சம் குறைந்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட விலைகள் உயரும் ஆபத்து ஏற்படுகிறது. தினசரி 5 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் சூயஸ் கால்வாய் வழியாக தான் இறக்குமதி செய்ய இருக்கிறது. அடுத்து இரண்டு நாட்களுக்குள் போக்குவரத்து சீராகா விட்டால் நிச்சயம் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்கின்றனர் நிபுணர்கள்.