தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்படும் என்று மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 200 யூனிட் இலிருந்து 300 ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்காக கூட்டுறவு வங்கி, ஜவுளித்துறைக்கு தனி ஆணையம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.