உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களுக்கு, தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது .
உத்திரபிரதேசத்தில் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் , தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் ,போலீசார் காணாமல் போன மாணவியை தேடி வந்துள்ளனர். மறுநாள் காணாமல் போன மாணவி ,தாத்ரி கால்வாயில் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலமாக இருந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளரான ஜி .முனிராஜ் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். இந்நிலையில் போலீசார் சம்பவம் நடந்த இடமான, தாத்ரி பகுதி சுங்க சாவடியிலுள்ள , கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியே சென்ற அப்பாஸி பாய்ஸ் என்று மோட்டார் பைக்கில் வித்தியாசமாக பெயர் எழுதப்பட்டிருந்தது. இந்த இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து ,அதன் உரிமையாளரான ஜூல்பிகர் அப்பாஸி (20 வயது) நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் தில்ஷாத் அப்பாஸி ( 21 வயது ),இஸ்ரேல் (22 வயது) ஆகிய மூவரும் மதுபோதையில், சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரதில் ஈடுபட்டு மாணவியை கொலை செய்துள்ளனர்.
இதன் காரணமாக 3 இளைஞர்களையும், போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது புலந்த்சாகர் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ராஜேஷ் பராஷார் வழங்கிய தீர்ப்பில் , மூன்று இளைஞர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது நிரூபணமானதால், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ,3 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.