Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் நடத்திய …’பாரத் பந்த்’ போராட்டத்திற்கு … நாடு முழுவதும் ஆதரவு …!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும்  விவசாயிகளுக்கு ஆதரவாக ,நேற்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்  சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த போராட்டமானது 100 நாட்களுக்கு மேல் கடந்து, 120வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் நடந்த  11 கட்ட பேச்சுவார்த்தையில் ,உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை இன்னும் தொடர்ந்தால் அக்டோபர் 2ம்  தேதி வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் 120 ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ள  விவசாயிகள் ,நாடு தழுவிய பாரத் பந்த்’  போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளின்  நாடு தழுவிய போராட்டத்திற்கு பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களும் ,காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கிய ‘பாரத் பந்த்’ போராட்டமானது , மாலை 6 மணி வரை சுமார் 12 மணி நேரமகா ,பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்த’ பாரத் பந்த் ‘போராட்டத்தில் விவசாயிகள் பஞ்சாப் ,ஹரியானா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ‘பாரத் பந்த்’ போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories

Tech |