Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில்… வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க… எந்த நோயுமே அண்டாது…!!!

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படும்.

நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் வெந்தயத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதில் அதில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் விட்டமின் ஏ, புரோட்டின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், சோடியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதில் வெந்தயம் ஊற வைத்த நீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

அதை தயாரிப்பது மிகவும் சுலபம். அதற்கு முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை இரண்டு டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். அவ்வாறு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியிலிருந்து விடுபடலாம். செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது. செரிமான பிரச்சனைகள் ஆல் அவதிப்படுபவர்கள் இந்த நீரை குடித்தால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கலை இது நீக்குகிறது. இது செல்லில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் இதில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவை கட்டுப்படுத்த உதவுவதால் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற செரிமானத்திற்கு உதவி புரிந்து அழகான சருமத்தை தருகிறது. வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது. சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளை போக்க உதவுகிறது

Categories

Tech |