வங்கதேச சுதந்திரத்துக்காக சிறை சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு சுதந்திர பொன் விழாவில் அவர் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், வங்கதேச சுதந்திரத்துக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று நானும் சென்றேன். அப்போது எனக்கு 20 வயது. எனது அரசியல் பயணத்தில் முதல் போராட்டமும் அதுதான் என்பது எனக்குப் பெருமை” என்று அவர் கூறியுள்ளார்.