Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு… போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு….!!!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல்தொடர்ந்து பல்வேறு கட்டமாக நீட்டித்து வருகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, மேற்கண்ட ஆவணங்களுக்கு இம்மாத இறுதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், போக்குவரத்து ஆவணங்களுக்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |