சிவகங்கை மாவட்டம் கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு 2,000 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் திருவிழா வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர்.
தற்போது இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு நேற்று நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.