Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… குக் வித் கோமாளி அஸ்வினின் பட்டைய கிளப்பும் ‘குட்டி பட்டாஸ்’… வெளியான கலக்கல் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி பட்டாஸ்  மியூசிக்கல் ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . இதைத்தொடர்ந்து இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

தற்போது அஸ்வின் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற  மியூசிக்கல் வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார் . வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த மியூசிக்கல் வீடியோ பாடலை சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் மற்றும் தி ரூட் நாய்ஸ்அண்ட் கிரெயின்ஸ் இணைந்து  வெளியிட்டுள்ளது . சாண்டி மாஸ்டர் நடனத்தில் உருவாக்கியுள்ள இந்த செம ஜாலியான பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .‌

Categories

Tech |