Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ… புகை மண்டலமாக மாறிய நேபாளம்… மக்கள் கடும் அவதி…!!!

நேபாளத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இந்தியாவின்   அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று  திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அதனால் அங்கு உள்ள 54 மாவட்டங்களில்  கரும் புகை சூழ்ந்துள்ளது  . மேலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுவுள்ளதால் மக்கள் மூச்சு விடக் கூட முடியாமல் திணறி வருகிறார்கள் . மேலும் சித்வான், பர்சா, பரா,மற்றும் மக்வான்பூர் ஆகிய மாவட்டங்களும்  காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அதனால் மாநிலமுழுவதிலும் கரும் புகை சூழ்ந்துள்ளதால்  வானம் தெளிவான நிலையில் இல்லை.

அதுமட்டுமன்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானம் போக்குவரத்து சேவை முற்றிலுமாக  பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் புகை மூட்டம் காரணமாக 4மணி நேரம் மூடப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில்  காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள்யாரும்  வெளியிடங்களுக்கு  வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . காற்று மாசுபாடு குறைந்த பிறகே கட்டுமான பணிகளை தொடர வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |