பிரான்ஸில் இன்று முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier veran அறிவிப்பின் படி நேற்று நள்ளிரவு முதல் Never, Aube, Rhone மாவட்டங்களுக்கு நான்கு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 மாவட்டங்களில் அறிவித்திருப்பது போல இந்த மூன்று மாவட்டங்களுக்கும் எந்த இடத்திலும் 6 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக பயணம் செய்யும் விரும்புவோர் அனுமதிச்சீட்டு கட்டாயம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் 19 மாவட்டங்களிலும் கடுமையான சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை போன்ற இடங்களில் 90,௦௦௦ ஆயிரம் போலீசாருக்கு மேலாக பணியில் ஈடுபட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.