Categories
தேசிய செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்வரின் மருமகன் மாயம்….. தற்கொலையா..?என்று விசாரணை …!!

கர்நாடக மாநில முன்னாள் முதலவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் காணாமல் போனதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் தேடும் பணியை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விஜி சித்தார்த் காணாமல் போனதால் அவர்களின் குடும்பம் அதிர்ச்சியில் இருந்துள்ளன சூழலில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா , காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினர்  பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். அவர் ஆற்றில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |