திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தங்கரத புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நேற்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தங்கரத புறப்பாடு நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
அதன் பின்னர் சின்ன குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் சாயரட்சை பூஜைக்கு பிறகு எழுந்தருளினார். அப்போது சின்ன குமார சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சின்ன குமாரசாமி தங்க மயில் வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதன்பின் நடைபெற்ற தங்கரத புறப்பாட்டில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில் இணை ஆணையர் குமாரதுரை மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தங்க ரகத்தை இழுத்தனர்.