திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே டி.டி.வி. தினகரன் மற்றும் விஜயகாந்த் உருவ படத்தை பிரச்சார வாகனத்தில் இருந்து கிழித்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் தே.மு.தி.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல் பாளையம் கிராமத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அபயம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் அந்த பிரச்சார வாகனத்தில் இருந்த டி.டி.வி.தினகரன் உருவப்படத்தையும், விஜயகாந்த் உருவப்படத்தையும் திடீரென கிழித்தெறிந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அ.ம.மு.க.வினரும், தே.மு.தி.க.வினரும் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். பின்னர் அவர்கள் தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ஆர் பழனி, அ.ம.மு.க. மின்வாரிய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ரஷீத் ஆகியோர் இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.