தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்த தகவலை கூறியுள்ளார்.
முன்னணி நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஸ்பெயினில் எடுக்க உள்ள சண்டைக் காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளது.
ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் வலிமை திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆகையால் வலிமை படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.