தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது.
இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது .