தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் வீரமணி ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவர் மீது கல்லை வீசியதில் திமுக இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் காயமடைந்துள்ளார். இதற்கு மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.