திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 280 பெண்கள், 9 லட்சத்து 12 ஆயிரத்து 943 ஆண்கள், 215 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 237 பேரும், பழனி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 783 பேரும், நிலக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 863 பேரும், ஆத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 698 பேரும், திண்டுக்கல் தொகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 979 பேரும், நத்தம் தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 616 பேரும், வேடசந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 பேரும் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விடுபட்டவர்கள், பட்டியலில் பெயர் இருப்பவர்கள் திருத்தம் செய்யவும், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்கவும், இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்வதற்கும் விண்ணப்பிக்க பட்டிருந்தது. இதையடுத்து இதில் தகுதியானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திண்டுக்கல்லில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 மூன்றாம் பாலினத்தவர் இடம்பெற்றுள்ளனர். மேலும் 48 ஆயிரத்து 102 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். தொகுதி வாரியாக பெண்கள், ஆண்கள், இதர வாக்காளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதன்படி பழனி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 592 ஆண்களும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 587 பெண்களும், இதர வாக்காளர்கள் 35 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 273 ஆண்களும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 143 பெண்களும், இதர வாக்காளர்கள் 26 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 442 வாக்காளர்கள் உள்ளனர். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 815 ஆண்களும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 496 பெண்களும் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 471 ஆண்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 57 பெண்களும், இதர வாக்காளர்கள் 55 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 வாக்காளர்கள் உள்ளனர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 251 ஆண்களும், 1 லட்சத்து 44 ஆயிரத்து 969 பெண்களும், இதர வாக்காளர்கள் 47 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 267 வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 261 ஆண்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 924 பெண்களும், இதர வாக்காளர்கள் 31 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 214 வாக்காளர்கள் உள்ளனர். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆண்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 312 பெண்களும், இதர வாக்காளர்கள் 9 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 44 வாக்காளர்கள் உள்ளனர்.